வாழ்கையில் எல்லாருக்கும் பிரச்சினைகள் உண்டு. கஷ்டங்கள் வாழ்வின் ஒரு பகுதி. விஞ்ஞானம் கூறுகின்றது நாம் சிந்திக்கும் முறைகளின் மூலமும், செயற்திறன்களின் மூலமும், எம்மில் உள்ள ஆற்றல்களை விருத்தி செய்து எமது விரிதிறனை மேம்படுத்த முடியும் என்று.
விரிதிறனுடைய ஒருவர் தனது இன்னல்கள் வேளையில் வலி, வேதனை, மனச்சோர்வு, பயம், கோபம் என்பவற்றை அனுபவிக்க மாட்டார் என்று பொருள் இல்லை. ஆனால் அவ்விக்கட்டான நிலையை ஏற்றுக்கொண்டு, அச்சூழ்நிலைக்கூற்றாற்போல் தன்னையும் தயார் படுத்திக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் மீண்டெழுந்து வரக்கூடியவராக இருப்பார்.
விரிதிறன் என்பது மிக அரிதான ஆற்றல், அல்லது ஒரு சிலரில், அதுவும் விஷேடமானவர்களில் மட்டும் காணப்படும் ஆற்றல் இல்லை. விரிதிறன் ஒருவரில் இருந்து ஓருவரிடம் வேறுபடுகிறது. அது பல அகக்காரணிகளையும், புறக்காரணிகளையும் கொண்டுள்ளது என Dr. ஆன் மாஸ்டென்ட் கூறியுள்ளார். மேலும் அது புள்ளி விவரங்களின்படி ஒரு போதும் செயல்படுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
சமாளிக்கும் திறமை
சமாளிக்கும் திறமை என்பது நிகழ்காலத்தில் (அதாவது தற்பொழுது) நாம் அனுபவிக்கும் பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கு பொருத்தமான தீர்வைக்கொண்ட உறுதியான வழியை கண்டறியதலாகும்.
நாம் நலமுடன் வாழ கட்டுப்பாட்டு தன்மை அவசியமானதொன்றாகும். கஷ்டங்கள் வரும் பொழுது நாம் பலவீனமாகின்றோம்.ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் ஓரு தீர்வு காணப்படும். அதை நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். அது வெளிப்படையான செயற்பாடாகவோ அல்லது உள்ளார்ந்த செயற்பாடாகவோ இருக்கலாம்.
முக்கியமாக நாம் எல்லாரும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நாம் தனியாக கஷ்டப்பட வேண்டியதில்லை. பிறரை அணுகி உதவி கோருதலும் விரிதிறனுக்குரிய ஒருவகை பண்பே.
முயற்சி :
*உங்களுக்கு நேரிட்ட கஷ்ட்டம் அல்லது சவால் ஒன்றை நினைத்து கொள்ளுங்கள்.
*அந்த இக்கட்டான நிலையை கடந்து வருவதற்கு உங்களுக்கு உதவிய செயல்திறன் என்ன?
*அச்செயல்திறன் இன்று எவ்வாறு உங்களுக்கு உதவுகின்றது?
முதலீட்டு விரிதிறன்
முதலீட்டு விரிதிறன் என்பது தொடற்சியான உற்சாகம், மகிழ்ச்சியாக இருத்தல், நலமான வாழ்க்கையை பேணுதல் போன்ற செயற்பாடுகளை கொண்டவையாகும்.
மற்றவர்களுடன் நல்லுறவை பேணுதல் , உடற்பயிற்சி, போதுமான நித்திரை, ஓழுங்கான உணவு பழக்க வழக்கங்கள், மதுபழக்கத்திற்கோ அல்லது வேறு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருத்தல் இன்றியமையாததாகும்.
நல்ல விஷயங்களை கவனித்தல் , எல்லாம் நன்மைக்கே எனும் எண்ணத்தை விதைத்தல், புதியவற்றை யோசித்தல், எமது விடயங்களில் தெளிவாகவும், அர்தமுள்ளதாகவும் இருத்தல் போன்றவை விரிதிறனுக்கு அவசியமான மூலகாரணங்களாகும்.
சிந்தனைக்கு:
- உங்களுடைய விரிதிறனை கட்டி எழுப்புவதற்கும், அதனை பேனுவதற்கும் எவ்வாறான செயற்பாடுகள் உதவின?
- நீங்கள் கஷ்ட்டத்தில் இருந்த பொழுது யாரிடம் உதவி கேட்க கூடியதாக, அல்லது அனுகக்கூடியதாக இருந்தது?
- அவர்களுடனான தொடர்பை இன்றும் பேணுகிண்றார்களா, எவ்வாறு?
விரிதிறனான சிந்தனை – எமது எண்ணங்களே எமது உணர்ச்சிகளின் நடவுகோள்.
உங்களது உணர்ச்சிகளை ஏதாவது ஒரு சம்பவம் அல்லது ஒரு சூழ்நிலை தூண்டுகின்றன. உதாரணமாக பயம் அல்லது கோபம் போன்றவற்றை எடுத்துகொள்ளலாம். சில எண்ணங்கள் சடுதியாக அடிக்கடி தூண்டப்படுகிறன. “ஏன் இது நடந்தது”(உ–ம், நான் ஏதும் பிழை செய்து விட்டதனாலா? இல்லையென்றால் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லையா?) போன்றவை ஏற்படலாம். மேலும் “அடுத்ததாக என்ன நடக்கும்?” (உ-ம், நான் பிரச்சினையில் மாட்டிக்கொள்வேனோ? அல்லது நான் நிராகரிக்கப்கடுவேனோ?). இவை போன்ற எதிர்மறையான சிந்தனைகளுக்கும், பிழையான எதிர்வு கூறல்களுக்கும் ஆளாகி விடுகின்றோம்.
ஆகவே எப்பொழுதெல்லாம் விரும்ப தகாத உணர்ச்சிகள் உங்களில் தூண்ட படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் விரிதிறனான சிந்தனைகளுக்கு இடம் கொடுத்தல் வேண்டும். பின் நிதானமாக உள்மூச்சை வாங்கி உங்களுள் தோண்றும் எண்ணங்களுக்கு கவனத்தை செலுத்த வேண்டும். அப்பொழுது சில நம்பிக்கைகள் அல்லது முடிவுகள் சடுதியாக தோண்றலாம். அவை சரியானதா இல்லை வேறேதும் பொருந்துமா? இல்லை அவை என்னுள் தாழ்வான முறையில் சலனத்தை ஏற்படுத்துமா என உங்களுள் கேள்வி எழுப்புங்கள்.
சிந்தனைக்கு:
- யாரைப்பற்றியாவது அல்லது ஏதுமொரு சம்பவத்தை பற்றியாவது பிழையான புரிந்துகொள்ளலால், எதிர்மாறாக முடிவெடுத்த சந்தர்ப்பம் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
- அவ்வாறான எண்ணங்கள் தோண்றுவதற்கான காரணங்களை கண்டறியுங்கள்.
- அவை எவ்வாறான உணர்சிகளை தூண்டியது?
- அதன் விளைவுகள் என்ன?
- அவ்விளைவுகளுக்காக எடுக்க கூடிய மாற்று வழி முறைகள் என்ன?